டிக்டாக்கில் டிரெண்டாகும் "மண்டை உடைப்பு சவால்” - சுயநினவை இழந்த இளைஞர்..!
சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில் சாகசம் செய்ய முற்பட்ட ஒரு இளைஞர் மண்டை உடைந்து சுயநினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் யாரும், இந்த வீடியோவில் செய்யப்படும் சவாலை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
சமூகவலைதளத்தில் வெளியான வீடியோவில் சாகசம் செய்ய முற்பட்ட ஒரு இளைஞர் மண்டை உடைந்து சுயநினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் யாரும், இந்த வீடியோவில் செய்யப்படும் சவாலை முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு சேலஞ்ச் வைரலாவது வழக்கம். சில சமயங்களில் பலரும் ரசிக்கும் விதத்தில் உருவாக்கப்படும் இதுபோன்ற சேலஞ்சுகளால் ஆபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
அப்படியொரு சவாலாக தற்போது டிக்டாக்கில் டிரென்டாகி வருவது தான் ”மண்டை உடைப்பு சவால்” எனப்படும் Skullbreaker Challenge. இதுவரை சமூகவலைதளில் உலா வந்த சவால்களுக்கும், இதற்கும் பல வேறுபாடு உள்ளன. முன்னதாக வெளியான சேலஞ்சுகளை செய்வதில் ஏதேனும் சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் இந்த மண்டை உடைப்பு சவால் என்பது கர்ணம் தப்பினால் மரணம் என்பது போன்ற ஆபத்து கொண்டுள்ளது.
மூன்று பேர் நின்று கொள்ள வேண்டாம். அவர்களில் இரண்டு பக்கவாட்டு பகுதிகளில் நிற்பவர்கள் குதிப்பார்கள். அவர்களை தொடர்ந்து நடுவில் இருப்பவர் குதிக்க முற்படுவார். அப்போது பக்கவாட்டு பகுதிகளில் நிற்கும் இருவர், குதிக்க முற்படும் நடுவில் இருப்பவரின் கால்களை தட்டி விட வேண்டும். இதை சமாளித்து நடுவில் நிற்பவர் சாகசத்தை செய்து முடிக்க வேண்டும்.
இது தான் ‘மண்டை உடைப்பு சவால்’ பெயருக்கு ஏற்றார் போல ஒருவேளை கால் இடறி நடுவில் இருப்பவர் தரையில் விழுந்துவிட்டால், ஆபத்து தான். இந்த சவாலில் மண்டை உடையும் அபாயம் இருப்பதால் தான், இதை ஸ்கெல் பிரேக்கர் சேலஞ்ச், அதாவது மண்டை உடைப்பு சேலஞ்ச் என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆபத்து நிறைந்த சேலஞ்சை மேற்கொண்ட பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், இது ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்காகி வருகிறது. இளைஞர்கள், பெண்கள் என பலரும் இந்த சவாலை செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இந்த சேலஞ்சில் ஈடுபட்ட போது, இளைஞர் ஒருவர் மண்டை உடைந்து சுயநினவை இழந்துள்ளார். அவர் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழே விழுந்து மயக்கமடைந்த அந்த இளைஞரை, உடனிருக்கும் அவர்கள் நண்பர்கள் எழுப்புகின்றனர். ஆனால் அவர் எழவில்லை. இதை பார்க்கும் நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.
மண்டை உடைப்பு சேலஞ்சில் ஆபத்து இருப்பதை உணர்ந்த கேரளா போலீசார், இதுபோன்ற ஆபத்தான் வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இச்செய்தியின் வாயிலாக நீங்கள் யாரும் இந்த ’மண்டை உடைப்பு சவாலை’ செய்து பார்க்க வேண்டாம் என்று நாங்களும் கேட்டுக்கொள்கிறோம்.
newstm.in