கஞ்சாவுக்கு அடிமை.. இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை கொன்ற தாய்..! உடல் பாகங்களை தேடும் போலீஸ்!!
கஞ்சாவுக்கு அடிமை.. இளைய மகனுடன் சேர்ந்து மூத்த மகனை கொன்ற தாய்..! உடல் பாகங்களை தேடும் போலீஸ்!!
கம்பம் அருகே தனது இளைய மகனும் தாயும் சேர்ந்து மூத்த மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் தலை, கை , கால்கள் துண்டிக்கப்பட்டு அடையாளம் தெரியாத வகையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த கம்பம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அந்த உடலில் கை, கால், தலை இல்லாததால் போலீசாஸ் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்த இருந்த சிசிடிவியில் பதிவான வாகன எண்ணை வைத்து கொலையாளிகளை பிடித்தனர். விசாரணையில் கம்பம் மருவரசி மஹால் 15 வது வார்டை சேர்ந்த செல்வி என்பவர் வீட்டிற்கு சென்றனர்.
ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை செய்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட தலை, கை, கால்களை தேடும் பணியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து செல்வி மற்றும் அவரது இளைய மகனை கைது செய்தனர். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மகனை தாய் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in