இந்தியாவில் சற்றுகுறைந்த கொரோனா.. ஒரேநாளில் 3,26,098 பேருக்கு தொற்று; 3,890 பேர் பலி !!
இந்தியாவில் சற்றுகுறைந்த கொரோனா.. ஒரேநாளில் 3,26,098 பேருக்கு தொற்று; 3,890 பேர் பலி !!
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் இருந்து இன்று சற்று குறைந்திருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்றைய(மே 15) கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொரோனாவால் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 3,26,098 -ஆகவும், இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 36,73,802 பேராகவும் குறைந்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா தொற்றால் 3,890 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,66,207 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.43 கோடி (2,43,72,907) ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,04,32,898-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,53,299 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நாடு முழுவதும் இதுவரை 18,04,57,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
newstm.in