`ஸ்மார்ட் கார்டு’ கிடைக்குமா! அரசு பரிசீலனை!

மத்திய மாநில அரசின் அனைத்து திட்டங்களும், சலுகைகளும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது மத்திய அரசு.

Update: 2020-02-04 23:34 GMT

மத்திய மாநில அரசின் அனைத்து திட்டங்களும், சலுகைகளும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது மத்திய அரசு.

தமிழகத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக அளவில் அதாவது ஏறக்குறைய 30,000 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம் அரசு சார்பில் ஜனவரி 31ல் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 4,000 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இன்னும் 20,000க்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் நல சங்கமும், மாவட்ட நிர்வாகமும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
அனைத்து நடவடிக்கைகளும் முயற்சிகளும் வேண்டியவர்களைச் சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

newstm.in

Tags:    

Similar News