2ஆவது டோஸ் செலுத்தினால் இலவசமாக ஸ்மார்ட் போன்!!
2ஆவது டோஸ் செலுத்தினால் இலவசமாக ஸ்மார்ட் போன்!!
கொரோனா தடுப்பூசி 2ஆவது டோஸ் செலுத்திக் கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் தீவிரமாக பரவிய நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளுக்கு மேலாக செலுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் பல மாநிலங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை.
ஆனால் 2ஆவது டோஸ் செலுத்தினால் மட்டுமே நோயை தடுக்க முடியும் என மத்திய மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாது டோஸ் தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ள அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜ்கோட்டில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்பவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒமிக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in