தெலுங்கானாவில் காவலர்கள் கையில் பீர் பாட்டிலுடன் பாம்பு போன்று ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னதாக சைபராபாத் மாவட்டத்தில் உள்ள ஷாத்நகர் காவல் நிலைய அதிகாரி ஸ்ரீதர் குமார் ஆடிய பாம்பு நடனம் சமூக வலைதளங்களில் பிரபலமானதை அடுத்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அதே போன்று அதே காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார், கையில் பீர் பாட்டிலுடன் பாம்பு டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


உதவி ஆய்வாளர், 5 காவலர்கள் ஆகியோர் சக காவலரின் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த போது, போதையில் இப்படி நடனமாடி உள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்த ஒருவர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. பலர் இதனை விமர்சித்திருந்தாலும், பணி நேரத்தில் இல்லாதபோது, அவர்கள் ஜாலியாக இருப்பதில் தவறில்லை என்று சிலர் ஆதரவு கருத்தும் கூறியுள்ளனர்.
 

newstm.in

Tags: