தமிழ் திரையுலகில் தன் புன்னகையாலும், தனிப்பட்ட நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. தமிழில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு புன்னகை அரசியாக வலம் வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முதலில் விஹான் என்ற 7 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் சினேகா சென்ற ஆண்டு 2020ல் மறுபடியும் ஆத்யந்தா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆத்யந்தாவின் முதல் பிறந்த நாள் சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இதில் நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் கலந்து கொண்டு குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தார். சிநேகா மகள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சினேகாவின் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.