உடல் தனியாக தலை தனியாக கிடந்த ராணுவ வீரர்.. காதலால் ஏற்பட்ட சோகம்!!
உடல் தனியாக தலை தனியாக கிடந்த ராணுவ வீரர்.. காதலால் ஏற்பட்ட சோகம்!!;
தெலங்கானா மாநிலம் குண்டூர் அருகே காதலியின் தாயாரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்தார்.
கொலனகோண்டாப் பகுதியிலுள்ள ரயில் பாதையில் தலைத் தனியாகவும் உடல் தனியாகவும் கிடந்ததை காலையில் அவ்வழியாக சென்ற மக்கள் கண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தலையையும், உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணையில் இறந்து கிடந்தது ராணுவ வீரரான எமினெனி பாலாஜி என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டின் விடுமுறையன்று எமினெனி பாலாஜி தனது சொந்த ஊரான கார்ப்பெலம் மண்டலுக்கு வந்திருந்த பொழுது ஒரு பெண்ணின் மேல் காதல் வசப்பட்டுள்ளார். அந்த பெண்ணோடு பல இடங்களிலுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சில மாதம் கழித்து, பாலாஜி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தெனாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் இவருடைய ராணுவ பணி பறிப்போனது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி நாட்டு துப்பாக்கியுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அப்பெண்ணையும், அவரது தாயாரை சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
newstm.in