7 பதக்கங்களை குவித்த நடிகர் மாதவனின் மகன்.. பிரபலங்கள் வாழ்த்து !!

7 பதக்கங்களை குவித்த நடிகர் மாதவனின் மகன்.. பிரபலங்கள் வாழ்த்து !!

Update: 2021-10-25 19:00 GMT

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சமீபத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஜூனியர் பிரிவில் 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமான மாதவன் பல்வேறு வெற்றிபடங்களை கொடுத்தார். தற்போது சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நீச்சல் போட்டியில் இந்தியளவிலும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பெங்களூர் பசவனகுடியில் நடந்த 47 வது ’ஜுனியர் நேஷனல் நீச்சல் சாம்பியன்ஷிப் 2021’ நீச்சல் பங்கேற்றார். இதில், 7 பதக்கங்களை வேதாந்த் குவித்துள்ளார். 16 வயதான வேதாந்த் 4 வெள்ளிப் பதக்கங்களையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் இப்போட்டியில் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதனை, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை நடிகர் மாதவனும் லைக் செய்துள்ளார்.


வேதாந்த் கடந்த மார்ச் மாதம் நடந்த லாட்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலம் வென்றிருந்தார். அதேநேரத்தில் நடிகர் மாதவனின் மகன் சாதனைக்கு பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News