மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசில் புகார் கொடுத்த மனைவி !

மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசில் புகார் கொடுத்த மனைவி !

Update: 2021-12-26 13:10 GMT

ஒரு  பெண் தன் கணவரை விட்டுவிட்டு மகளின் கணவரான மருமகனோடு ஓட்டம்பிடித்த சம்பவம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. 

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரியங்கா தாஸ் என்பவர் கிருஷ்ண கோபால் தாஸ் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். சில ஆண்டுகள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அன்பின்னர் திருமணமான சில காலங்களில் கிருஷ்ண கோபால் தாஸ், தன் மனைவி பிரியங்காவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரை பிரிந்து தாய் வீட்டில் தங்கினார்.

பின்னர் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கணவனும் மனைவியும் பெண்ணின் வீட்டில் ஒன்றாக வாழ தொடங்கினர். அதன்படி கிருஷ்ண கோபால் தாஸ் வீட்டோடு மாப்பிள்ளையாக செட்டிலாகிவிட்டார். 

சில மாதங்களுக்கு பிறகு தனியாக வசிக்க மனைவி அழைத்தப்போதும் கோபால் தாஸ் மறுத்துவிட்டார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நாள் கழித்துதான் கணவனின் உண்மை முகம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது கணவனுக்கும் தனது தாய்க்கும் கள்ளக்காதல் இருப்பதை அறிந்து பறிப்போனார். 

பிரியங்கா வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது தாய் ஷிபாலி தாஸூடன் கோபால் பேசி பழகி வந்துள்ளார். நாளடைவில் நெருக்கம் ஏற்பட்டு மாமியார் – மருமகன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. 

இதனையறிந்து தன் கணவன் மற்றும் தாயுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். இதனால் இருவரும்  வீட்டை விட்டுவெளியேறினர். அந்தப்பெண்ணும் கணவனை தவிக்க விட்டு மருமகனுடன் குடித்தனம் நடத்த தொடங்கிவிட்டார்.  இதனால் விரக்தியடைந்த பெண் தன் கணவனை கண்டுபிடித்து தரக்கோரியும் தாய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  


newstm.in

Tags:    

Similar News