சுரேஷ் ரெய்னாவுக்கு 10 நிமிடத்தில் ஆக்சிஜன் கொடுத்து உதவிய சோனு சூட்.. வைரலாகும் ரெய்னா பதிவு !!

சுரேஷ் ரெய்னாவுக்கு 10 நிமிடத்தில் ஆக்சிஜன் கொடுத்து உதவிய சோனு சூட்.. வைரலாகும் ரெய்னா பதிவு !!

Update: 2021-05-08 12:38 GMT

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக முதல் அலையை விட இரண்டாம் அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் கொடூரமாக உள்ளது.

வடமாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு இல்லாமலும், ஆக்சிஜன் இல்லாமலும் பலரும் இறந்து வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ‘

கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்களும் முன்வந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த ஆண்டில் இருந்தே மக்களுக்கு பெருவாரியாக உதவி வருவது நடிகர் சோனு சூட். தற்போது இவருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைக்கூப்பி நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டரில், தனது அத்தைக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதாக கூறி உதவி கேட்டு பதவிட்டிருந்தார்.மேலும் அந்த ட்வீட்டில் அவர் உத்திர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத்தையும் டேக் செய்திருந்தார். 

அவருடைய இந்த ட்வீட்டைக் கண்ட சமூக ஆர்வலரும், பாலிவுட் நடிகருமான சோனு சூட், அடுத்த பத்து நமிடத்தில் உங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வந்து சேரும். மேலும் விவரங்களை தெரியப்படுத்துங்கள் என்று கூறி இருந்தார். அவர் கூறியது போலவே ரெய்னாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டரை அந்த மாநிலத்தில் உள்ள தனது கொரானா மீட்புக் குழுவின் மூலம் வழங்கியிருக்கிறார் சோனு சூட். 

இதனை தொடர்ந்து அந்த ட்வீட்டில் மீண்டும் பதிவிட்ட ரெய்னா, சோனு பாய் இவ்வளவு உதவிகளை செய்த உங்களுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இவர்கள் இருவரின் ட்விட்கள் மற்றும்  சோனு சூட்வின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரவி பாராட்டை பெற்று வருகிறது.


newstm.in

Tags:    

Similar News