தென்மேற்கு பருவமழை தீவிரம்.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை !!

தென்மேற்கு பருவமழை தீவிரம்.. 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை !!

Update: 2021-07-06 19:20 GMT

கேரளாவில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் கனமழை பெய்தப்போதும் அதன்பின்னர் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே கேரளாவில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதனால் கடந்தசில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மழைப்பொழிவு குறைவுதான் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாளை காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வரும் 9ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அரபிக்கடலில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் 8, 9ஆம் தேதிகளில்  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளளது.
 

newstm.in

Tags:    

Similar News