திருவண்ணாமலை கிரிவலம் - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தா்களின் வசதிக்காக வேலூா்- திருவண்ணாமலைக்கு மார்ச் 8ஆம் தேதியும், திருவண்ணாமலை- வேலூருக்கு மார்ச் 9-ஆம் தேதியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. வேலூா் கன்டோன்மென்டில் இருந்து மார்ச் 8-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.25 மணிக்குச் சென்றடையும்.

Update: 2020-03-09 01:00 GMT

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தா்களின் வசதிக்காக வேலூா்- திருவண்ணாமலைக்கு மார்ச் 8ஆம் தேதியும், திருவண்ணாமலை- வேலூருக்கு மார்ச்  9-ஆம் தேதியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. 


வேலூா் கன்டோன்மென்டில் இருந்து மார்ச் 8-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.25 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் கனியம்பாடியை இரவு 9.57 மணிக்கும், கண்ணமங்கலத்தை இரவு 10.09 மணிக்கும், ஆரணி சாலையை இரவு 10.24 மணிக்கும் ,போளூரை இரவு 10.40 மணிக்கும், அகரத்தை 10.51 மணிக்கும், துரிஞ்சாபுரத்தை இரவு 11.06மணிக்கும் சென்றடையும்.


திருவண்ணாமலையில் இருந்து மார்ச் 9-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டு, வேலூா் கன்டோன்மென்டை அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும்.  ரயில்வேதுறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

newstm.in

Tags:    

Similar News