காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்.. வைரல் புகைப்படங்கள் !!
காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்.. வைரல் புகைப்படங்கள் !!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன. அதேநேரத்தில் இவர் படங்களில் நடிப்பதை குறைத்து வருவதாகவும் நல்ல கதைகள் கொண்ட படங்களை தேர்வுசெய்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘லாபம்’ திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை. தற்போது சலார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தனது காதலருடன் ஜோடியாக தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in