தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்! எப்படி முன்பதிவு செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை!

தடுப்பூசிக்கு ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்! எப்படி முன்பதிவு செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை!

Update: 2021-04-28 07:43 GMT

இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதை அடுத்து மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பெற யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பதிவு செய்யும் முறை:
1.கோவின் 2.0 அல்லது ஆரோக்ய சேது இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். 2.மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அத்துடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச் சொல் ஒன்று மொபைல் எண்ணிற்கு வரும்.
3 பயனர்களின் மொபைல் எண் மூலம் புதிய பயனர்களைச் சேர்ப்பது, அவர்களின் தகவலகளை சரிபார்த்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ள நேரத்தை குறிப்பிடுவது ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.


ஒரே எண் மூலமே நான்கு பயனர்கள் வரை தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தனியாக அடையாள அட்டைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
5கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நேரம் வரை தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சான்றுகளை மாற்றலாம். ஒரு முறை தடுப்பூசி செலுத்திவிட்டால் அதன் பின் எதையும் மாற்ற முடியாது.
பதிவிட வேண்டிய அடையாள அட்டைகள்
1 ஆதார் அட்டை
2.வாக்காளர் அடையாள அட்டை
3.கடவுச்சீட்டு

4ஓட்டுநர் உரிமம்
5 பான் அட்டை
6 தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அட்டை
7புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்
8 இணை நோய் இருப்பதற்கான சான்றிதழ்

9இவை அனைத்தும் தரப்பட்ட பின், ஒரு பதிவுச் சீட்டு வழங்கப்படும். இதை பதிவு செய்து கொள்ளும் தளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கும் இந்த பதிவுச் சீட்டு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.


முதல் டோஸ் செலுத்திக் கொள்ள விண்ணப்பித்தவர்களை தானாகவே இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நாளில் இருந்து 29வது நாள் முதல் 42வது நாளுக்குள், எப்போது வேண்டுமானாலும் ஒரு தேதியை இரண்டாவது டோஸ் செலுத்துவதற்காக தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்லும் போது அரசு அங்கீகரித்திருக்கும் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News