தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு.. 700 காளைகளை அடக்க 300 காளையர் களத்தில்..!

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு.. 700 காளைகளை அடக்க 300 காளையர் களத்தில்..!

Update: 2022-01-15 11:06 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.

நேற்று (14ம் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு, காங்கேயம் பசு மாடும் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தங்க காசுகள், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Similar News