நாளை தொடக்கம்.. ஆனால் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

நாளை தொடக்கம்.. ஆனால் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

Update: 2022-01-04 16:48 GMT

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இரண்டாவதாக ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (புழன்கிழமை) தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று பரிசோதனை செய்துகொண்ட பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதி செய்ததையடுத்து எம்எல்ஏ ராமச்சந்திரன் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அடுத்தடுத்து எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

newstm.in

Similar News