ஸ்டெர்லைட் வழக்கு ஆகஸ்ட் மாதம் விசாரணை! உச்சநீதிமன்றம் தகவல்!
ஸ்டெர்லைட் வழக்கு ஆகஸ்ட் மாதம் விசாரணை! உச்சநீதிமன்றம் தகவல்!
ஸ்டெர்லைட் ஆலை மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது . ஸ்டெர்லைட் மேல்முறையீடு வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நடைமுறைப்பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை உடனடியாக ஏப்ரல் முதல் வாரத்தில் அவசர வழக்காக விசாரிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரிப்பதாக ஒத்தி வைத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.