அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்! என்னம்மோ குறியீடு இருக்கே?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்! என்னம்மோ குறியீடு இருக்கே?

Update: 2021-04-13 11:43 GMT

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புதிய படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் சூட்டிங்கின் ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. 2021ம் ஆண்டு தீபாவளிக்கு வர இருக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார்.கிராமத்துப் பின்னணியில் சிவாவின் அதிரடி மசாலா, சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எல்லாம் சரிதான் இன்று வெளியான் ஸ்டில்லில் காலையில் சூரியன் உதிக்கும் காட்சிக்குப் பின்னணியில் ரஜினியும் சிவாவும் இருப்பது போல் உள்ளது. கொரோனாவினால் படத்திற்கான சிக்கல்கள் முடிந்து படப்பிடிப்பு முடிந்து விடும் என்ற நம்பிக்கைக்கான காட்சியா? அல்லது தமிழ்நாட்டில் திமுகவின் உதயசூரியன் உதிக்கப் போவதை சிம்பாலிக்காக ரஜினி மூலம் சொல்லியுள்ளார்களா?


என்னம்மோ குறியீடு இருப்பதாகத் தான் தெரிகிறது.

Tags:    

Similar News