தடுத்து நிறுத்தப்பட்ட பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு.. மீண்டும் பதற்றம்.. ஒருவர் சுட்டுக்கொலை !

தடுத்து நிறுத்தப்பட்ட பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு.. மீண்டும் பதற்றம்.. ஒருவர் சுட்டுக்கொலை !

Update: 2021-10-28 11:20 GMT

ஜம்மு காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் எல்லை பாதுகாப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள குல்காம் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி இரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். 

இதோடு மட்டுமல்லாமல் அக்டோபர் மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில் பலரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இந்த விவகாரம்  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் பாரம்முல்லா பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஏற்கெனவே பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்களை ஜம்மு காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று உள்ளூர் கடைக்காரரைக் கொலை செய்ய சென்றுகொண்டிருக்கும்போது பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் அவர் உயிரிழந்துள்ளார். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டுகள், ஒரு வெடி குண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த நபர் ஜாவேத் ஆ வானி என்றும், அவர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் இவர் பீகார் தொழிலாளர்களை கொன்ற குல்ஜார் எனும் தீவிரவாதிக்கு உதவியவர் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News