புயல் வேக பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் திடீர் அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி !!

புயல் வேக பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் திடீர் அறிவிப்பு.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி !!

Update: 2021-08-31 16:53 GMT

சர்வதேச தரத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெயின் ஓய்வு முடிவை அறிவித்தார்.

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சில் டேல் ஸ்டெயினை அந்த பெரிதும் நம்பியிருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது என்றால் டேல் ஸ்டெயின், தன்னுடைய அபார பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை நடுங்க வைக்கக்கூடியவர்.

குறிப்பாக பேட்ஸ்மேன் கால் அருகில் பந்தை பிட்ச் செய்து அவுட் ஸ்விங் செய்வதில் வல்லவர். அதுவும் 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி, அதை ஸ்விங் செய்வார் என்பதால் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள திணறுவர். 

தற்போது, 38 வயதான ஸ்டெயின் அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஸ்டெயின் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் காயம், பார்ம் அவுட் போன்ற காரணங்களால் அணிக்கு திரும்பவில்லை. 

தென்னாப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் 26 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் சாய்த்துள்ளார்.

மேலும், 125 ஒருநாள் போட்டியில் 196 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டியில் விளையாடி 65 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டும், டி20-யில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் அவரின் சிறந்த பந்து வீச்சாகும்.

newstm.in

Tags:    

Similar News