ஐ.ஏ.எஸ் அதிகாரி கேட்ட வித்தியாசமான வரதட்ணை - அதிர்ச்சி அடைந்த பெண்!

நெல்லை துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனின் திருமணம் பேராவூரணியில் நடைபெற்றது. சிவகுரு பிரபாகரன் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து ஐஏஎஸ் அதிகாரியானவர். ஐஏஎஸ் முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியமாக இருந்த அவர், ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் உறுதியாக இருந்தார்.

Update: 2020-02-29 02:00 GMT

நெல்லை துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனின் திருமணம் பேராவூரணியில் நடைபெற்றது. சிவகுரு பிரபாகரன் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து ஐஏஎஸ் அதிகாரியானவர். ஐஏஎஸ் முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியமாக இருந்த அவர், ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் தான் சென்னையை சேர்ந்த கிருஷ்ணபாரதி என்ன டாக்டர் பெண்ணை மணம்முடித்தார் சிவகுரு பிரபாகரன்.


பல பெண்களை பார்த்து ஒரு வழியாக கிருஷ்ணபாரதியை திருமணம் செய்து கொண்டார் அவர். அதற்குமுன் எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளாததற்கு காரணம் மணமகன் கேட்ட வரதட்சணை தான். அவர் பணமோ, பொருளோ கேட்கவில்லை. அவர் கேட்டது வித்தியாசமான வரதட்சணை. 
அது வரதட்சணை என்பதைவிட நிபந்தனை எனலாம்.

அதாவது தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண், தான் பிறந்த ஒட்டங்காடு கிராமம் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராமங்களில் வாரம் இரண்டு நாள் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு சென்னை நந்தனம் கல்லூரி பேராசிரியரின் மகள் கிருஷ்ணகுமாரி திருமணத்திற்கு சம்மதித்தார். இதனால் இருவரின் திருமணமும் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. ஊர் மக்கள் அனைவரும் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News