வந்தது வலிமை பட அப்டேட்..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்..!

வந்தது வலிமை பட அப்டேட்..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் போனி கபூர்..!

Update: 2021-03-15 16:49 GMT

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் தேதியை குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படம் கடந்த 2 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இதுவரை படத்தை குறித்து ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் உட்பட தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களுமே இந்த படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் தொடர்ந்து வலிமை பட அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர் ரசிகர்கள். நேற்று கூட கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை டேக் செய்து ட்விட்டரில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்துவிட்டனர் ரசிகர்கள். உடனே அவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் வலிமை பட அப்டேட்டை நிச்சயம் வெளியிடுவேன் என வேடிக்கையாக பதிவிட்டு விட்டார். இது தற்போது வரை வைரலாக சென்று கொண்டுள்ளது.


அந்தளவுக்கு ரசிகர்கள் பொறுமை இழந்து வருகின்றனர். தீவிரத்தை உணர்ந்துகொண்ட பட தயாரிப்பாளரான போனி கபூர் தற்போது ட்விட்டரில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்த தினமான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


முன்னதாக அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரிடம் வலிமை பட அப்டேட்டைக் கேட்டு ரசிகர்கள் நச்சரித்தனர். இதனால் ஆபத்தை உணர்ந்த நடிகர் அஜித் முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதன்படி ரசிகர்கள் பொறுமைக் காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தற்போது விவகாரம் வானதி சீனிவாசன் வரை சென்றுவிட்டதால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் போனி கபூர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனினும், வலிமை பட போஸ்டருக்கே ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை பார்க்க மேலும் ஒரு யுகம் ஆகிவிடும் போல என கவலை தெரிவிக்கிறார்கள் அஜித் நல விரும்பிகள்.


 

Tags:    

Similar News