ரிலீஸ்க்கு தயாராகி வரும் 'வலிமை'.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அஜித் ரசிகர்கள் !!
ரிலீஸ்க்கு தயாராகி வரும் 'வலிமை'.. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த அஜித் ரசிகர்கள் !!
அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்றே கூறலாம். 2021 ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை குவித்திருக்கும் தமிழ் படமான "வலிமை" படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் (BayView Projects) மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் H. வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
"வலிமை" படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிக்கப்பட்டுவிட்டது. பொங்கலுக்கு வெளியாக தயாராக இருக்கிறது. இப்படத்தின் மிரட்டலான பிஜிம் வெளியாகி ரசிர்களிடம் எதிர்பார்ப்பபை அதிகப்படுத்தியுள்ளது. இரண்ட பாடல்கள், மேக்கிங் வீடியோவும் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இன்றோ அல்லது நாளையோ வலிமை படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் டிக்கெட்களை ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நிர்ணயித்த ரூ.120 கட்டணத்தில் சினிமா டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in