ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.. முதலமைச்சர் திடீர் அறிவிப்பு !!
ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.. முதலமைச்சர் திடீர் அறிவிப்பு !!
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில வாரங்களாக குறிப்பிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.21 கோடி பேர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.62 லட்சம் பேர். பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல நகரங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்து வருகிறது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் சில முக்கிய அவரிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது, மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஓரிரு நாளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய கொரோனா பாதிப்பு சூழல் தொடர்ந்தால் ஊரடங்கு விதிப்பதை நிராகரிக்க முடியாது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் சுகாதார உட்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது அவர் நேரடியாக கூறவில்லை என்றாலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படாலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தக்கட்ட ஆலோசனை நடத்தி விரைவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in