மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி ..!!

மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி ..!!

Update: 2021-08-27 06:00 GMT

புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதில், புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் உரையாற்றினார்.திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனையடுத்து நிதித்துறையை கைவசம் வைத்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினருக்கு 50 சதவீத மானியம்.
புதிய உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச அரிசி வழங்க ரூ.197.50 கோடி ஒதுக்கீடு 
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும்.
மூடப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை.
கல்வித்துறைக்கு ரூ.742 கோடி
உயர்கல்வித்துறைக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு
குறிப்பாக மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்.
மீனவ மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளத்துறை நூலகம் சீரமைக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News