பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட மாணவி!!

பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட மாணவி!!

Update: 2021-12-24 20:45 GMT

அமெரிக்காவில் பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட கல்லூரி மாணவியை காவல்துறையினர் மீட்டனர்.

மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோர் புகார் தெரிவித்ததை அடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.காணாமல்போன மாணவி கடைசியாகத் தனது உறவினர்களுக்கு ' லவ் யூ' என மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன் பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரது செல்போன் எண்ணைக்கொண்டு அவர் கடைசியாக எங்கு இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியுடன் செல்போனில் தொடர்பிலிருந்த 500 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மாணவியை பற்றி விசாரிக்க போலீஸார் பிரவுனி என்பவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு மாணவியின் கல்லூரி .டி கார்டு கிடைத்தது. இதையடுத்து போலீஸார் வீட்டிற்குள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பாதாள அறை ஒன்றில் கல்லூரி மாணவி நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மாணவி ஆன்லைன் மூலம் பிரவனிக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.பிறகு நேரில் சந்திக்கலாம் என மாணவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது, அவர் மாணவியிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வலுக்கட்டாயமாக மாணவியை வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அவரை வீட்டிலிருந்த பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Similar News