மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை : எஸ்.பி. விளக்கம்!!

மாணவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை : எஸ்.பி. விளக்கம்!!

Update: 2022-01-21 08:45 GMT

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்த லாவண்யா (17) மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார். அவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவர் வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவர் வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகள் லாவண்யாவை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி லாவண்யாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி லாவண்யா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவி லாவண்யாவிடம் வந்து விசாரித்தனர். மேலும் மாணவி தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற தொடர்ந்து வற்புறத்தியதாகவும், ஆனால் நான் மாறததால் தொடர்ந்து தன்னை கடுமையாக திட்டியதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா உயிரிழந்தார். இந்நிலையில், மதமாற்றம் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

newstm.in

Similar News