SRM கல்லூரியில் துப்பாக்கி, கத்தியுடன் மாணவர்கள்!! பகீர் கிளப்பும் வீடியோ!

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்கள் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பயங்காரமாக மோதிக்கொண்டனர். காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

Update: 2020-02-05 19:05 GMT

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்கள் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பயங்காரமாக மோதிக்கொண்டனர். காட்டாங்கொளத்தூரில்  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்பு, கைகலப்பாக மாறி கல்லூரி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கிக் கொண்டனர். அதில், ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை நோக்கி சுடுவதற்கு துரத்திச் சென்றுள்ளார்.

 

இதைப் பார்த்ததும் அங்குள்ள சக மாணவர்கள், மாணவிகள் அலறியடித்து சத்தம் போட்டு  தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த மாணவர்கள் சிலரை பட்டா கத்தியால்  வெட்டியதில்  மூவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மறைமலைநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். பட்டாகத்தி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மறைமலைநகர் நகர அதிமுக பிரமுகர் மகன்தான் கையில் துப்பாக்கியை வைத்து மோதலில் ஈடுபட்டார் என்பதும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அதிமுக பிரமுகரின் பேரன்  இந்த மோதலில் கத்தியுடன் அடிதடியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சிசிடிவி வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் கையில் துப்பாக்கி வந்தது எப்படி என்பது குறித்தும் பின்னணியில் யார் உள்ளனர்  என்பது குறித்தும்  துப்பாக்கியுடன் தப்பியோடியவரை  மறைமலைநகர் போலீசார் தேடிவருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News