அசத்தல்! ஜல்லிக்கட்டில் சாதித்து காட்டிய சிறுமி!!

அசத்தல்! ஜல்லிக்கட்டில் சாதித்து காட்டிய சிறுமி!!

Update: 2022-01-22 19:05 GMT

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆறுதல் பரிசை பெற மறுத்த சிறுமி கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் தங்க காசை பரிசாக பெற்றுள்ளார்.

பதினோராம் வகுப்பு மாணவியான யோகதர்ஷினி தந்தையுடன் இணைந்து காளைகளை பராமரித்து வருகிறார். மதுரை அவனியாபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார். அவரது காளை பிடிமாடாகிவிட்டது.

அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக்குழுவினர் சிறப்பு பரிசு அறிவித்தனர். ஆனால் அதை வாங்க மறுத்து களத்தைவிட்டு வெளியேறினார். பரிசு வாங்கிச் செல்லும்படி அமைச்சர் மூர்த்தி ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தும் சிறுமி பரிசை பெறவில்லை.

கடந்த ஆண்டும் அவரது காளை பிடிமாடாகி விழாக்குழுவின் பரிசை அவர் மறுத்திருந்தார். இந்த நிலையில் முத்துகருப்பு என்ற தனது காளையை யோகதர்ஷினி கோவை ஜல்லிக்கட்டில் களமிறக்கினார்.

அவரது காளை வீரர்கள் கையில் பிடிபடாததால் அவருக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. அவரை ஊக்குவிக்கும் வகையில் தங்கக் காசும் பரிசாக அளிக்கப்பட்டது.

newstm.in

Similar News