அசத்தல்...! இனி பெண்களும் ராணுவத்தில் சேரலாம்!
அசத்தல்...! இனி பெண்களும் ராணுவத்தில் சேரலாம்!
ஒவ்வொரு நாடும் பாதுகாப்பிற்காக ராணுவத்தை உறுதியான முறையில் கட்டமைக்கும். அந்த வகையில் மத்திய கிழக்குப் பகுதியுள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய திட்டங்களை அமுல் படுத்தி வருகிறார். நாட்டு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பிலும் பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சௌதி அரேபியாவில் வசிக்கும் பெண்கள் அந்நாட்டு ராணுவத்தில் வீரர்களாகவும், கார்போரல்களாகவும், சார்ஜென்ட்களாகவும் இணைந்து பணியாற்றலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை சௌதி அரேபியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருந்த போதிலும், இப்போதுதான் இது நடைமுறைக்கு வருவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் பெண்கள் குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும் எனவும், வெளிநாட்டவரை மணந்த பெண்கள் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அனுமதியில்லை என்றும் சௌதி ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளன.சௌதியில் சில ஆண்டுகளாகவே பெண்கள் பணிபுரிய பல துறைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டிலுள்ள பெண்ணியவாதிகள் குறிவைக்கப்பட்டுள்ள நிலையிலும் மறுபுறம் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் படிப்படியாக அந்நாட்டு அரசு தளர்த்தி வருகிறது.