அள்ள அள்ள ஆவணங்கள்-அசந்துபோன அதிகாரிகள்
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜியின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், நகைகள் லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜியின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் 95 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாதார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.
கரூர் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் ஜவுளி நிறுவனங்கள் ஆகியவற்றில் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.மேலும், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 4 இடங்களிலும் புலி பாய்ச்சலில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், நகைகள் லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்தவை விட தேவையான ஆணவங்கள் கிடைத்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, நீதிமன்றத்தில் தமக்கு முன் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி முறையிட்டுள்ளார்.
விரைவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
newstm.in