அடுத்தடுத்து பண்டிகைகள்.. சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பில் மக்கள் !

அடுத்தடுத்து பண்டிகைகள்.. சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என எதிர்பார்ப்பில் மக்கள் !

Update: 2021-12-09 06:05 GMT

இனி அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பெங்கல் என பண்டிகை காலம் கலைகட்ட உள்ளது. இக்காலங்களில் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். இதனால் ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரயில்களில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. பொங்கல் பண்டிகை வரை தென்மாவட்டங்களுக்கான அனைத்து ரயில்களும் இதேநிலையில் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களும் முன்பதிவு செய்வதற்கு போதிய இடங்கள் இல்லாமல் தடுமாறுகிறார்கள்.

குறிப்பாக இந்த மாதம் இறுதி முதல் பொங்கல் முடிந்து திரும்பும் வரை ரயில்களில் பயணம் செய்வதற்கு போதிய இட வசதி இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் சேவையில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது . குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடியவர்கள் சென்னையில் அதிகம் பேர் வசதிப்பதால் பண்டிகை காலத்தை கருதி மேலும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் இருந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செல்லும் வகையில் 23ஆம் தேதி, புத்தாண்டுக்கு 30 ஆம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு, ஜனவரி 12, 13ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல், பொங்கல் முடிந்து சென்னை திரும்ப வசதியாக நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்களை விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


newstm.in

Similar News