அடுத்தடுத்து அதிர்ச்சி.. கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு !

அடுத்தடுத்து அதிர்ச்சி.. கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு !

Update: 2021-11-06 07:08 GMT

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. இதில் அடிக்கடி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.  

இந்தநிலையில் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 9  பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.  அதேபகுதியில் மற்றொரு இடத்திலும் கள்ளச்சாராயம் அருந்தி மேலும் சிலர் இறந்தது அதன்பின்னர் நடந்துள்ளது.

அந்த வகையில், பீகாரின் கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் கள்ளச் சாராயம்  குடித்து சுமார்  26 பேர் இறந்துள்ளனர். கோபால்கஞ்சில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் நேற்று இறந்தனர். 

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முறையாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனக்கூறி இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.  

newstm.in

Tags:    

Similar News