வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பகுதி! பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

வெற்றியும் தோல்வியும் வாழ்வின் பகுதி! பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

Update: 2021-07-27 12:35 GMT

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்று தடம் பதித்தார் ஆனால், பெண்களுக்கான தனி நபர் சாப்ரே பிரிவின் இரண்டாம் சுற்றில், உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் 7-15 என்று போராடி  பவானி தேவி துரதிர்ஷ்டவசமாக தோல்வி அடைந்தார்.

தோல்வி குறித்து பவானி தேவி தனது ட்விட்டர் பதிவில், “மிகப் பெரிய நாள். இது உற்சாகத்துடனும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தது. நான் முதல் போட்டியில் 15/3 என்ற கணக்கில் நாடியா அசிசியை வென்று வாள் வீச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனையாக இடம் பிடித்தேன். 


ஆனால், இரண்டாவது போட்டியில் 7/15 என்ற கணக்கில், உலகின் சிறந்த வீராங்கனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மேனான் ப்ரூநெட்டிடம் தோல்வியடைந்தேன். நான் என்னுடைய பங்கை சிறப்பாகச் செய்தேன். ஆனால், வெற்றி பெறமுடியவில்லை. நான் வருந்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.



பவானி தேவியின் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது எல்லாம் கணக்கில் கொள்ளப்படும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி. உங்களுடைய பங்களிப்பால் இந்தியா பெருமைப்படுகிறது. நம்முடைய குடிமகன்களுக்கு நீங்கள் முன்னுதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.
 

Tags:    

Similar News