பிறந்தநாளில் ஆசிரியைக்கு இப்படியோரு பரிசா?- அதுக்கும் மேல காத்திருந்த அதிர்ச்சி !!
பிறந்தநாளில் ஆசிரியைக்கு இப்படியோரு பரிசா?- அதுக்கும் மேல காத்திருந்த அதிர்ச்சி !!
பிறந்தநாள் விழாவுக்கு வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணுக்கு உள்ளாடை பரிசளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியை தனது வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற முறையில் பத்மநாபாவுக்கு ஆசிரியை அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் சிறப்பு ஏற்பாடுகளுடன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது அனைவரும் ஆசிரியைக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளனர். அதேபோன்று வீட்டின் உரிமையாளர் பத்பநாபாவும் தனது சார்பில் பரிசு ஒன்றை ஆசிரியை அளித்துள்ளார். விழா முடிந்து அனைவரும் சென்ற பின்னர், பரிசுப் பொருட்களை ஒவ்வொன்றாக ஆசிரியை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது பத்மநாபா அளித்த பரிசை பார்த்த ஆசிரியைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பத்மநாபா அந்த ஆசிரியைக்கு உள்ளாடையை பரிசாக அளித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியைக்கு அடுத்த ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
விழா முடிந்து வீட்டுக்கு சென்ற பத்மநாபா, ஆசிரியையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தான் பரிசாக அளித்த உள்ளாடையை அணிந்து காட்டும்படி கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை வீட்டு உரிமையாளர் பத்மநாபா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின்னர் தான் தெரியவந்தது, நீண்ட நாட்களாகவே ஆசிரியை மீது வீட்டு உரிமையாளர் பத்மநாபா கண் வைத்திருந்தார் என்பது. இதனால், பிறந்தநாள் விழாவை காரணமாக வைத்து அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதும் தற்போது சிக்கிக்கொண்டதும் அம்பலமாகியுள்ளது.
newstm.in