கொரோனாவுக்கு இடையில் இப்படியொரு சோகம்.. அடுத்தடுத்து 8 பேர் உயிரிழப்பு.. பெரும் அதிர்ச்சி
கொரோனாவுக்கு இடையில் இப்படியொரு சோகம்.. அடுத்தடுத்து 8 பேர் உயிரிழப்பு.. பெரும் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி நாள்தோறும் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் வடமாநிலங்களில் சடலங்கள் எரிக்கக்கூட இடம் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்கள பணியாளர்கள் பலரும் கொரோனாவின் பிடியில் சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரபிர மாநிலத்தில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ஜெய்த்பூர் பகுதியில், வாந்தி மற்றும் மயக்கத்துடன், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் இறந்துபோனார்கள்.
போலீசார் தகவல் அறிந்து சென்று விசாரித்தனர். அப்போது தான் தெரியவந்தது அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர் என்று. மேலும் அந்த பகுதியில் போலியாக மது தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை சாப்பிட்ட அவர்கள் இறந்துள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேபோல அருகில் உள்ள அசாம்கர் மாவட்டத்திலும் மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். கொரோனாவால் உத்தரபிரதேச மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், எரிசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேநோரத்தில் கள்ளச்சாராயம் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in