கரூர் மற்றும் நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..!

கரூர் மற்றும் நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்..!

Update: 2021-12-14 13:04 GMT

கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு, மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

கரூர், தான்தோன்றிமலை, கருப்புக்கவுண்டன் புதூரில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் கண்ணாடிகள் உடைந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்லில் திடீரென பலத்த சத்தத்துடன் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றுவிட்டதாக மக்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர்.

Similar News