திடீர் மருத்துவமனைகள்! 4,000க்கும் மேல் ரயில் பெட்டிகள் தயார்!

திடீர் மருத்துவமனைகள்! 4,000க்கும் மேல் ரயில் பெட்டிகள் தயார்!

Update: 2021-04-20 06:14 GMT

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா படுதீவிரமாக மாறியதால் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பின. இதனால் தனியார் கட்டிடங்கள், ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்தபின்னர் அனைத்தும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனையடுத்து மருத்தவமனைகள் நிரம்புவதால் தற்போதும் ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இது, தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும், இவ்வாறு தெரிவித்துள்ளது.

நாடு முழுவரும் கொரோனா 2ஆவது அலை வேகமெடுத்துள்ளதால், பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த ஆண்டை போல இந்தாண்டும் ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

Tags:    

Similar News