திடீர் திருமணம்! காதலியை கரம் பிடித்த காமெடி நடிகர் !!

திடீர் திருமணம்! காதலியை கரம் பிடித்த காமெடி நடிகர் !!

Update: 2021-01-25 14:00 GMT

பிரபல நடிகர் விஜய் சேதுபதி படத்தில் காமெடியனாக நடித்த சித்தார்த் விபின், தான் காதலித்த பெண்ணையை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண புகைப்பட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஹலோ நான் பேய் பேசுகிறேன்,  ஜிங்கா,  கேப்மாரி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். மேலும்,  இசைத்துறையை தாண்டி, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, காஷ்மோரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் சித்தார்த் விபின் நடித்துள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் விபினுக்கும் - ஷ்ரேயா என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஷ்ரேயாவும், சித்தார்த் விபினும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணம் காதல் திருமணமாகும். 


சித்தார்த் விபின் - ஷ்ரேயா திருமணத்தை நடிகர் நகுல் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மேலும், சித்தார்த் விபினுக்கும் - ஷ்ரேயா திருமண காட்சியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, புது மாப்பிள்ளை சித்தார்த் விபினுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Tags:    

Similar News