நடிகர் யோகிபாபுக்கு திடீர் திருமணம்! அடுத்த மாசம் வரவேற்பு நிகழ்ச்சி!

பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று (05/02/2020) காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் யோகி பாபு. திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என மேடைகளில் பேசிய நிலையில் யோகி பாபு

Update: 2020-02-05 18:08 GMT

பிரபல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று (05/02/2020) காலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் யோகி பாபு. திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என மேடைகளில் பேசிய நிலையில் யோகி பாபு யாருக்கும் அறிவிக்காமல் இன்று காலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமண நிகழ்வில் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் யோகி பாபுக்கு திரையுலகினர் பலரும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக அவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அப்போது திருமணம் குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்பேன் என யோகிபாபு கூறியிருந்தார். அவர் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி படு பிஸியாக இருந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று காலை திருமணம் செய்துக் கொண்டார்.

newstm.in

Tags:    

Similar News