தொகுப்பாளி நக்ஷத்ராவுக்கு திடீர் திருமணம் ! திரையுலகினர் வாழ்த்து மழை !!

தொகுப்பாளி நக்ஷத்ராவுக்கு திடீர் திருமணம் ! திரையுலகினர் வாழ்த்து மழை !!

Update: 2021-01-27 11:47 GMT

பிரபல தொகுப்பாளி நக்ஷத்ராவுக்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, அவருக்கு திரையுலகினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக நடிகர், நடிகைகள் போலவே, தொகுப்பாளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் பெருகி வருகிறது. அந்த வகையில், டிடி, ரம்யா, திவ்யா, பிரியங்கா என பலரும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தனர். அந்த வரிசையில், தற்போது தொகுப்பாளி நக்ஷத்ராவும் இடம் பிடித்துள்ளார். அவருக்கு என உலகம் முழுக்க நிறைய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 

மேலும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நக்ஷத்ரா, லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் நாயகியாகவும் அறிமுகமானார். இப்போதும் நடிப்பில் கொடிகட்டி பறந்துவரும் நக்ஷத்ரா, திடீரென திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.  அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த மகிழ்ச்சியான செய்தியை, தனது கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

நக்ஷத்ராவின் திருமண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.   

Tags:    

Similar News