மதுபானம் அருந்துவோருக்கான வயது திடீர் குறைப்பு !!

மதுபானம் அருந்துவோருக்கான வயது திடீர் குறைப்பு !!

Update: 2021-12-23 10:45 GMT

மாநிலத்தில் கலால் சட்டம் மூலம் மதுபானம் அருந்துவோர் வயது வரம்பு குறைக்கப்படுவதாக அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

அரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் உட்கொள்ள, வாங்க, விற்க சட்டப்பூர்வ வயது 25 லிருந்து 21 ஆக  குறைக்கப்பட்டது. பிற மாநிலங்கள் குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மதுபான விற்பனையில் அரியானா மாநிலத்தை முன்மாதிரி மாநிலமாக மற்ற மாநிலங்கள் கூறி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அரியானா கலால் திருத்தம் மசோதா, 2021, ஹரியானா கலால் சட்டம், 1914-இன் 27, 29, 30 மற்றும் 62 பிரிவுகளில் மாற்றங்களுடன் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மது அருந்துதல், அதை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆண்டுகளாகக் குறைத்து, டெல்லிக்கு இணையான கொள்கையை அரியானா கொண்டு வந்துள்ளது.


newstm.in

Tags:    

Similar News