திமுக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம்! இந்து முன்னணி நிர்வாகி கைது!!

திமுக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம்! இந்து முன்னணி நிர்வாகி கைது!!

Update: 2022-01-29 18:16 GMT

கோவை மாவட்டம் அன்னூரில் அருகே திமுகவை சேர்ந்த பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்த சரவண சுந்தரம் என்பவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் எப்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதில் இருந்து விலகி தனியாக பைனான்ஸ் நிறுவனம் துவங்கினார். மேலும் இந்து முன்னணி அமைப்பில் இருந்து விலகி திமுகவிலும் சேர்ந்தார்.

அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் சரவண சுந்தரத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு லட்ச ரூபாயை திருப்பித் தராமல் இருந்ததால் தமிழ்ச்செல்வனிடம், சரவண சுந்தரம் பணத்தை திருப்பி கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில்  தமிழ்செல்வன்  சரவண சுந்தரத்தை , இந்து முன்னணியில் இருக்கும் தனது நண்பரான ராஜராஜனுடன் சேர்ந்து கடந்த 27ஆம் தேதி வெட்டிக்கொன்றார். பின்னர் இருவரும் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சரவணசுந்தரம் முதலில் வேலை பார்த்த அன்னூர் சூர்யா தேவி பைனான்ஸ்  நிறுவனத்தின் உரிமையாளர்கள்  ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தக் கொலைக்கு தூண்டுதலாக இருந்தது தெரியவந்தது.

தங்களிடமிருந்து தனியாக சென்று பைனான்ஸ் தொழில் நடத்தியதால் ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட இவர்கள் , பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையை பயன்படுத்தி தமிழ்செல்வன், ராஜராஜன் மூலம் கொலையை நிகழ்த்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Similar News