திடீரென கடைக்குள் புகுந்து பற்றி எரிந்த கார்!!
திடீரென கடைக்குள் புகுந்து பற்றி எரிந்த கார்!!
மதுரையில் கடைக்குள் புகுந்த கார் ஒன்று விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த சுகன் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து காரில் சிம்மக்கலில் இருந்து சேதுபதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது.
கார் சேதுபதி சிக்னல் அருகே வந்த போது சுகனின் கட்டுப்பாட்டை இழந்த அங்கிருந்து கடை ஒன்றில் மோதியது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்துத் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்களை சில மணி நேரத்திலேயே தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in