வங்கியிலேயே அலுவலக உதவியாளர் தற்கொலை.. வீண் பழி சுமர்த்தியதால் சோக முடிவு!!

வங்கியிலேயே அலுவலக உதவியாளர் தற்கொலை.. வீண் பழி சுமர்த்தியதால் சோக முடிவு!!

Update: 2020-03-01 15:50 GMT

திருப்பூர் மாவட்டம் அவிநாசி நேரு வீதி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (54). இவர் தனது மனைவி கற்பகம் மற்றும் ரம்யா தேவி, ராஜேஸ்வரி ஆகிய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். இவர் அவிநாசி – கோவை சாலையில் உள்ள கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணேசன் வங்கியில் வாடிக்கையாளரின் பணம் ரூ.60 ஆயிரத்தை திருடிவிட்டதாகவும் அது குறித்து சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் வங்கி மேலாளர் கலைச்செல்வி கூறியுள்ளார். மேலும் உடனடியாக திருடிய பணத்தை வங்கியில் ஒப்படைக்காவிட்டால் போலீசில் புகார் அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்றும், போலீசில் புகார் அளித்தால் வங்கியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும் தன் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்துவதாக வங்கிக்கு வரும் நெருக்கமான வாடிக்கையாளர்கள் ஒரு சிலரிடம் சொல்லி வருந்தப்பட்டுள்ளார். 

என்னும் மனஉளைச்சலில் இருந்த கணேசன், வங்கியின் உணவு உண்ணும் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீசார் உடலை கைப்பற்றி, வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பணத்தை திருடியதாக மேலாளர் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் அதற்கு கணேசன் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முழுமையான விசாரணை செய்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். 

newstm.in

Tags:    

Similar News