உருவாகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’ 2ம் பாகம்… வடிவேலு பாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா..?
உருவாகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’ 2ம் பாகம்… வடிவேலு பாத்திரத்தில் நடிப்பது யார் தெரியுமா..?
அசோகன் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. முரளி, வடிவேலு, ராதா, வினுசக்கரவர்த்தி, மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஒரு பழைய பஸ்ஸை வைத்து தான் முழு படமும் எடுக்கப்பட்டிருந்தது. அதிலும், இந்தப் படத்தில் வந்த எலி கூட ஒரு முக்கிய பங்கைக் கொடுத்தது.
இந்நிலையில், மாபெரும் வெற்றிப் படமான ‘சுந்தரா டிராவல்ஸ்’சின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில், வடிவேலுவின் கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகிபாபு மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.