ரத்த காயத்துடன் சிஎஸ்கே வெற்றிக்கு போராடிய சூப்பர்மேன் டூப்ளசிஸ் !!

ரத்த காயத்துடன் சிஎஸ்கே வெற்றிக்கு போராடிய சூப்பர்மேன் டூப்ளசிஸ் !!

Update: 2021-09-26 20:15 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சூப்பர் மேன் இருக்கிறார் என்றால் டூப்ளசிஸ் கூறலாம். ஏனெனில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அசாதாரண பங்களிப்பை கொடுத்து வருகிறார். அவர் களத்தில் ஃபீல்டிங் போது முன்னாள் நின்றாலும், எல்லைக்கோடு அருகே நின்றாலும் பந்தை தன்னை தாண்டி பின்னால் செல்வதை விரும்ப மாட்டார். 

அதனை இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் நிரூபித்துள்ளார். முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன்படி போட்டியின் 10ஆவது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், லாங்-ஆன் திசையில் பெரிய ஷாட் ஆட முயன்றார். அந்த பகுதியில் ஃபீல்டிங்கை கவனித்துக் கொண்டிருந்த டூப்ளசிஸ் அதை லாவகமாக கேட்ச் பிடித்து மோர்கனை வெளியேற்றினார். பவுண்டரி லைனுக்கு அருகே மிகவும் நேர்த்தியாக பேலன்ஸ் செய்து அந்த கேட்சை எடுத்திருந்தார் அவர். 

அப்போது அவரது இடது காலின் மூட்டுப் பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர் விளையடினார். களத்தில் ஃபீல்ட் செய்த போது அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

பவுண்டரி லைனில் கேட்ச் பிடிப்பதில் டூப்ளசிஸ் சிறந்தவர் என ரசிகர்கள் அவரை சமூக வலைத்தள பக்கங்களில் புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவர் பிடித்த கேட்ச் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 


newstm.in
 

Tags:    

Similar News