பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார் நடிகர் - அதிர்ச்சியில் படக்குழு..!

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார் நடிகர் - அதிர்ச்சியில் படக்குழு..!

Update: 2021-02-18 17:10 GMT

சுமார் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலமான பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஐம்பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் உள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியத்துவம் பெற்ற சுந்தரச் சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் இவர் கலந்துகொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.

இந்நிலையில் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்ட தேதியில் ஷூட்டிங் நடைபெறதாதால், அவர் படத்தில் இருந்து விலகும் முடிவௌ எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமிதாப் பச்சனின் சுந்தரச்சோழன் கதாபாத்திரம் தான் படத்தில் திருப்புமுனையாக இருக்குமாம். தற்போது அவர் படத்தில் இருந்து விலகுவது மணிரத்னத்தை மிகவும் கவலையடைச் செய்துள்ளதாம். அதேசமயத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒரு கதாபாத்திரத்தில் இருந்து அமிதாப் பச்சன் போன்ற நடிகர் விலகமாட்டார் என்பதும் ரசிகர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது. 

Tags:    

Similar News