வலிமை படத்தில் சர்ப்ரைஸ் பாடல்! அதிர வைத்த யுவன்!

வலிமை படத்தில் சர்ப்ரைஸ் பாடல்! அதிர வைத்த யுவன்!

Update: 2021-06-24 07:31 GMT

 

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஹெச்.வினோத் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.அந்த திரைப்படம் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான தீரன் படம் ஹெச்.வினோத்தை தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது படத்திலேயே அஜீத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தை நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கினார்.தற்போது மீண்டும் அஜீத்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

வலிமை படம் குறித்து எப்போது அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கோயில்களுக்கு முன்னால் பேனர் அடிப்பது, பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சரிடம் அப்டேட் கேட்டது, ட்விட்டரில் தினமும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை டேக் செய்து டார்ச்சர் செய்வது, அரசியல் பிரபலங்களிடம் அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்தது.இதற்கு ஒருபடி மேலே சென்று சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயில் அலியிடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினடமும் அப்டேட் கேட்டு அளற விட்டனர்.

மே 1 அஜித்குமார் பிறந்த நாளன்று படத்திலிருந்து சுவாரசிய தகவல்கள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத இரண்டாவது அலை ஊரடங்கு காரணமாக மீண்டும் அப்டேட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில்,மாநாடு படத்தின் புரமோஷனுக்காக கிளப் அவுஸ் வந்து அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அப்போது யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசும் போது, வலிமை படத்தின் முதல் அறிமுக பாடல் எப்போதும் போல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாகவும், படத்தின் முதல் பாடலுக்கு "கும்தா" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.   

வலிமை பாடல் சிறப்பாக வந்துள்ளதாக யுவன்சங்கர்ராஜா தெரிவிக்க உற்சாகத்தில் துள்ளி குதிக்க துவங்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Tags:    

Similar News